அரியலூரில் கிடைக்கும் STIGMATOPHYGUS
- Aswatha Biju
- Jul 1, 2021
- 1 min read
அரியலூரில் கிடைக்கும் பலவிதமான புதைபடிமங்களில் நட்சத்திர மீன் வகையை சார்ந்த STIGMATOPHYGUS என்னும் தொல்லுயிர் எச்சம் அரியலூர் குரூப்பிற்குள் வரும், கல்லங்குறிச்சி Formation யில் மிகுதியாக கிடைக்கின்றன. இவ் உயிரினம் கடல் மட்டத்தில் ஊர்ந்து வாழும் உயிரினம் ஆகும். இவ்வகை உயிரினம் தன்னை தற்காத்துக்கொள்ள உடல் முழுவதும் முள்ளுடன் காணப்படும், ஆனால் தொல்லுயிர் படிமங்களாக மாறும்போது முள் அனைத்தும் உதிர்ந்து, ஓடு மட்டும் புதை படிமமாக கல்லங்குறிச்சி என்னும் பகுதியில் காணப்படும்.மற்ற இடங்களில் அதன் முள்ளின் படிமங்கள் காணப்படும். இவ்வகை உயிரினத்தை கண்டறிய அதன்மேல் உள்ள ஐந்து பூ போன்ற குறியே சான்று. கல்லங்குறிச்சி formation இல் கிடைக்கும் இவ் உயிரினம் ஆனது 66 to 83 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.

Comments